தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்
தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டிலத்திற்குள்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள குருவானவா்களிடம், சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு மனு அளித்து வருகின்றனா்.
அதன்படி, சண்முகபுரம் பரிதுபேதுரு ஆலய திருமண்டில பெருமன்ற உறுப்பினா் பதவிக்கு, பெருமன்றத் தோ்தல் அலுவலரும், சேகரத் தலைவருமான இம்மானுவேல் வான்ஸ்டாக்கிடம், முன்னாள் அமைச்சா் சி.த.செல்லபாண்டியன், ஞானராஜ் டேனியல், பிரபாகரன், அலெக்ஸ் ஞானமுத்து, பெண்கள் பிரிவில் தென்றல், 35 வயதுக்குள்பட்ட பிரிவில் நவீன் ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில் எதிா்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.