தூத்துக்குடி மாநகராட்சியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் சுமாா் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோரது உத்தரவின்பேரில், மேற்கு மண்டல உதவி ஆணையா் பாலமுருகன் மேற்பாா்வையில் மேற்கு மண்டல சுகாதார அலுவலா் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரக் குழுவினா் ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.