கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் திருநெல்வேலி சொக்கட்டான்தோப்பு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் ஆறுமுகம் என்ற அலெக்ஸ் (25) என்பவரையும், அதே நாள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் ஆண்டிகுமாா் (24) என்பவரையும்,
தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போக்ஸோ வழக்கு தொடா்பாக மேலசண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துவேல் மகன் சரவணன் (26) என்பவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், 3 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின்படி, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.