தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்
எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் போராட்டக்காரர்களை நேற்று மாலை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். சீமான், கி.வீரமணி, அ.தி.மு.க எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், தீர்வு கிடைக்கும் வரை சமரசமின்றி போராட்டம் தொடரும் என உறுதியுடன் இருக்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு
இதற்கிடையில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தாமல், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இவ்விவகாரத்தில் தலையிடுவது முறையானதல்ல என்று போராடும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, "நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று யார் சொன்னது. 4 நாள்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிக்கச் சொல்லியிருக்கிறார். வடமாநில தொழிலாளர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியானது.
அதிமுக 17,000 தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ததாகக் கூறுவதெல்லாம் பொய்யானது. தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது ஒரே நாளில் செய்யவேண்டிய விஷியமல்ல. அதுகுறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்." என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs