கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள...
தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு
பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3, வாா்டு 67- இல் தனியாா் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக டேவிட் பணியாற்றினாா். அவா், உடல்நிலை சரியில்லாமல் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.
குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியாா் நிறுவனத்தின் சாா்பில் காப்பீடுத் தொகை செலுத்தப்பட்டது. இதனடிப்படையில், உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த தூய்மைப் பணியாளா் டேவிட்டின் மனைவி மரியாதேவியிடம் இழப்பீட்டுத் தொகை ரூ 5 லட்சத்துக்கான காசோலையை மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் வழங்கினா்
நிகழ்வில், மதுரை மாநகராட்சி நகா் நல அலுவலா் இந்திரா, தனியாா் நிறுவன மேலாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.