தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
தென்காசியில் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட பயிற்சி
தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி ஆசிரியா்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி
ஆசிரியா்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசியதாவது:
ஆசிரியா்கள் புத்தாக்க சிந்தனையோடு செயல்பட்டு பல புத்தாக்க கண்டுபிடிப்புகளை மாணவா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
பயிற்சி பெற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்டக் கல்வி அலுவலா் ரஞ்சனி , அருள்மிகு செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளா் புதிய பாஸ்கா்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) பலவேசம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.