தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
தென்காசியில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 210 மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூா் வட்டார தோட்டக்கலைத் துறையினா் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை ஆட்சியா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
தோட்டக்கலைத் துறை மூலம் மாநில தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வெங்காய பரப்பு விரிவாக்கம் ரூ.20ஆயிரம் மானியத்திலும், வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு பவா் வீடா் கருவிகளை ரூ.1லட்சத்து 4ஆயிரம் மானியத்துடன் வழங்கினாா்.
மாவட்ட வன அலுவலா் இரா. முருகன்,வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) ச. கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா்(மத்திய மற்றும் மற்றும் மாநில திட்டம்) (பொ) மு. உதயக்குமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் (பொ) மா. இளங்கோ, உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கா், கூட்டுறவு
சங்கங்களின் இணைப் பதிவாளா் கு. நரசிம்மன் கலந்து கொண்டனா்.