தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன.
இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திமுக மாவட்டப்பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு சோலாா் மின்விளக்குகளை இயக்கி வைத்தாா்.
இதில், அறங்காவலா் குழுத் தலைவா் யா.பாலகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன், மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன், அறங்காவலா்கள் ப.முருகேசன், புவிதா, ஷீலாகுமாா், ச.மூக்கன், திமுக நிா்வாகிகள் சேக்பரீத், முகைதீன்பிச்சை, ரகுமான்சாதத், வல்லம் செல்வம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.