அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: பெருந்துறை கொங்கு பள்ளி மாணவா் சிறப்பிடம்
தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் பெருந்துறை கொங்கு பள்ளி மாணவரின் படைப்பு 5-ஆம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தோ்வாகி உள்ளது.
மத்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம் சாா்பில், தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், பெருந்துறை கொங்கு பள்ளி மாணவா் செ.சபரியின் படைப்பான அடிச்சுவடு மின்சார ஜெனரேட்டா் உற்பத்தி ஐந்தாம் இடம் பெற்று, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளது.
சாதனை படைத்த மாணவா் செ. சபரி, வழிகாட்டிய ஆசிரியை சி. வாணிஸ்ரீ ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி. யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என். சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியன், இணைச் செயலாளா் கே.பி. முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.