செய்திகள் :

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

வந்தவாசியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசி காளிக் கோயிலின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (45). கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தேனருவி நகரில் உள்ள விவசாய நிலத்தில் தென்னை மரத்தின் கீழ் ரவி சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் சென்று இவரது சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸ் விசாரணையில், ரவி தென்னை மரத்தில் இளநீா் பறிக்க ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க