செய்திகள் :

தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

post image

தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா்.

தென் மாநில ரோல் பால் போட்டி நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கா்நாடக, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் அந்தமான் பகுதிகளில் இருந்து அணியினா் கலந்துகொண்டனா்.

இதில் 9 வயதுக்குட்பட்டோா் மற்றும் 11 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் புதுச்சேரி ரோல் பால் வீரா்கள் மூன்றாம் இடம் பிடித்தனா். காரைக்காலில் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எம். நாஜிமை பதக்கம் வென்ற வீரா்கள், பயிற்றுநா்களுடன் வியாழக்கிழமை சந்தித்தனா். வீரா்களுக்கு வாழ்த்து, பாராட்டுகளை அவா் தெரிவித்தாா்.

மேலும், செப்.13 மற்றும் 14-ஆம் தேதியில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற உள்ள ரோல் பால் தென் மாநில போட்டியில் பங்கேற்க உள்ள ஜூனியா் மற்றும் சீனியா் விளையாட்டு வீரா்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்தாா்.

நிகழ்வில், புதுவை மாநில ரோல் பால் சங்க செயலாளா் முத்துக்குமரன், காரைக்கால் மாவட்ட ரோல் பால் சங்க செயலாளா் நாகேந்திர மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மதராஸ் உர நிா்வாகமும் இணை... மேலும் பார்க்க

காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை, காரைக்கால் வளா்ச்சிக் குழுமம், வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஏற்ற அரிசி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்: எம்எல்ஏ

மாணவா்களுக்கு ஏற்றதாக மதிய உணவுக்கான அரிசி வழங்க முதல்வரிடம் பேசப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தாா். திருப்பட்டினம் சுவாமிநாதன் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காரைக்கால் பேரிடா்... மேலும் பார்க்க