செய்திகள் :

`தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் வீட்டுவிடுங்கள்'- சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

post image

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அத்தீர்ப்பு விலங்குகள் நல ஆர்வலர்களை மகிழ்ச்சி படுத்துவதாக அமைந்துள்ளது. அத்தீர்ப்பில்,''தெருநாய்கள் விவகாரத்தில் விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படவேண்டும். தெருநாய்களை பிடித்துச்சென்று கருத்தடை ஆப்ரேஷன் செய்து, தடுப்பூசி போட்ட பிறகு அவற்றை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்துவிடவேண்டும். தெருநாய்களை அடைத்து வைக்க தடைவிதிக்கப்படுகிறது. ஆக்ரோஷமான மற்றும் நோயுள்ள நாய்களை மட்டும் தடுப்பூசி போட்டு தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைத்திருக்கவேண்டும்.

தெருநாய்களுக்கு பொது இடங்களில் சாப்பாடு போடக்கூடாது. அவற்றிற்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாப்பாடு போடவேண்டும். மாநகராட்சி அதற்காக பிரத்யேக இடங்களை உருவாக்கவேண்டும். அதோடு அந்த இடத்தில் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைக்க வேண்டும். உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தெருநாய்களை தத்து எடுக்க மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கலாம். தத்து எடுத்த பிறகு அதனை தெருவில் விடக்கூடாது'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி வரவேற்றுள்ளார். அதோடு நாடு முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன?

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரேந்திரா, “பப்பி” என அழைக்கப்படும் இவர், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய வியாபாரம் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கி அமலாக்க இயக்குநரால் (ED) ஆகஸ்... மேலும் பார்க்க

``தூய்மைப் பணியாளர்கள் வரலட்சுமி உயிரிழப்பு; அரசின் அலட்சியம்தான் காரணம்'' - சீமான் குற்றச்சாட்டு

சென்னைகண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும... மேலும் பார்க்க

``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்

`பிடித்த இடத்திலேயே விட வேண்டும்'தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டத் தடை; 3 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்... ஆனாலும், காத்திருக்கும் ஆபத்துகள்!

ஆன்லைன் விளையாட்டுகள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பணம் கட்டுவதும், பணம் சம்பாதிப்பதுமாக மாறிய பிறகு, மாணவர்கள் முதல் முதியோர் வரை அதற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை பல கோடி. விளையாடுபவர்களின் ப... மேலும் பார்க்க

மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்தா எப்படி?'

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் 18ம் வார்டு இமயம் நகர், பிரசன்னா நகரில் வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள திறந்தவெளி சாக்கடை நிரம்பி வீட்டிற்குள் புகுந்து மூன்று மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் சாக்கடையுடன... மேலும் பார்க்க

``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி

சென்னையில் நேற்று, ஜாபர்கான் பேட்டையில் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த கருணாகரனை, அவ்வழியே பூங்கொடி என்பவர் கூட்டிக்கொண்டு சென்ற அவரின் பிட்புல் நாய் கடித்துகுத்தறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அ... மேலும் பார்க்க