செய்திகள் :

ஆன்லைன் சூதாட்டத் தடை; 3 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்... ஆனாலும், காத்திருக்கும் ஆபத்துகள்!

post image

ஆன்லைன் விளையாட்டுகள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பணம் கட்டுவதும், பணம் சம்பாதிப்பதுமாக மாறிய பிறகு, மாணவர்கள் முதல் முதியோர் வரை அதற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை பல கோடி. விளையாடுபவர்களின் பணம் கோடி கோடியாக ஒருபக்கம் பறிக்கப்பட, உயிர்களும் பறிபோக ஆரம்பித்ததுதான் கொடுமை.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. சில மாநில அரசுகள் தமதளவில் சட்டங்களை இயற்றின. ஆனாலும், ‘மத்திய அரசு சட்டம் இயற்றுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்’ என்று பலரும் முறையிட்டார்கள்.

ஆனால், ‘ஆன்லைனில் விளையாடுவது மட்டும் போதாது. இந்தியாவை இந்தத் துறையில் உலகின் முன்னணி நாடாக நிலை நிறுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்று கடந்த ஆண்டின் சுதந்திர தின உரையில், புளகாங்கிதப்பட்டுப் போய் பேசி அதிர்ச்சி கொடுத்தார் பிரதமர் மோடி.

அடுத்தடுத்து உயிர்கள் பறிபோய்க்கொண்டே இருக்க, ‘ஆன்லைன் பண விளையாட்டுகளால் சமூக - பொருளாதாரச் சீரழிவுகள் அதிகரித்து வருகின்றன’ என்றபடி ஆன்லைன் கேமிங் தடை மசோதாவை அதிரடியாக இப்போது மக்களவையில் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.

இந்திய ஆன்லைன் கேமிங் சந்தை 2024-25-ல் ரூ.33,000 கோடி அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால், அதில் 85% பண விளையாட்டுகளே. இதன்மூலம் ரூ.20,000 கோடி வரை அரசுக்கு வரி வசூலாகி வந்தது. ஆனாலும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தடை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அனைவருமே வரவேற்க வேண்டும்.

இந்த மசோதா - ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் திறன் வளர்ப்பு சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் சூதாட்டமாக இருக்கும் பண விளையாட்டுகளைத் தடைசெய்யவும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவும் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் இதே தண்டனைதான். இந்தச் சூதாட்டங்களுக்காக விளம்பரம் அல்லது பிரசாரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் அபராதம்!

அரசாங்கத்தின் அனுமதியோடு நடைபெற்று வந்த ஆன்லைன் கேம்கள், இந்த மசோதா மூலம் தடை செய்யப்படவிருக்கின்றன. அதேசமயம், முறைப்படுத்தப்படாத தளங்களில் விளையாடுவது, சட்டவிரோத பணப் பரிமாற்றம், டேட்டா திருட்டு என்று தேசத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கான ஆபத்து சூழவிருப்பதை மறுத்துவிட முடியாது. அவற்றுக்கான தீர்வுகளையும் இதே வேகத்துடன் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

குற்றங்கள் களையப்பட வேண்டும்... வேர்வரை!

- ஆசிரியர்

மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்தா எப்படி?'

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் 18ம் வார்டு இமயம் நகர், பிரசன்னா நகரில் வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள திறந்தவெளி சாக்கடை நிரம்பி வீட்டிற்குள் புகுந்து மூன்று மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் சாக்கடையுடன... மேலும் பார்க்க

``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி

சென்னையில் நேற்று, ஜாபர்கான் பேட்டையில் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த கருணாகரனை, அவ்வழியே பூங்கொடி என்பவர் கூட்டிக்கொண்டு சென்ற அவரின் பிட்புல் நாய் கடித்துகுத்தறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அ... மேலும் பார்க்க

கார்ட்டூன்: ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவோம்..!

கார்ட்டூன்: ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவோம்..! மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; தண்டனை, ஆணையம், இ-ஸ்போர்ட்ஸ்.. 5 முக்கிய அம்சங்கள்!

ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று தாக்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: `தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம்!?' - இந்தியா கூட்டணியின் திட்டம் சாத்தியமா?

ராகுல் காந்தி குற்றச்சாட்டுஇந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாக இந்தியா கூட்டணி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது தேர்தல் ஆணை... மேலும் பார்க்க

``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக... மேலும் பார்க்க