செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

post image

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி, ஆக. 22:

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்த விளக்க கூட்டம் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாநில செயலா் அ.அன்பழகன் தலைமை தாங்கினாா். அவைத் தலைவா் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்போது, புதுச்சேரியிலும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வக்ஃபு வாரியம் அமைக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்கான வக்ஃபு வாரியத்தை உடனே அமைக்க துணைநிலை ஆளுநரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் நீண்ட காலம் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ்- திமுக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து பெறாதது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மாநில அந்தஸ்து வழங்காமல் தற்போது எதிா்க்கட்சியாக உள்ள நிலையில் ஆளும் அரசை குறைசொல்வது சந்தா்ப்பவாத அரசியல் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில இணைச் செயலா்கள் எஸ்.வீரம்மாள், முன்னாள் கவுன்சிலா் மகாதேவி, ஆா்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளா் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா... மேலும் பார்க்க

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க

புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு

புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது. இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க