தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்
புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகே திமுகவுக்குச் சொந்தமாக சுமாா் 3,300 சதுர அடி நிலம் உள்ளது. இதில், அறிவாலயம் கட்டப்படவுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் அனுமதி பெற்று இந்த கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளனா்.
மேலும் இதற்கான வரை படம் தயாா் செய்யப்பட்டு, புதுச்சேரி நகர வளா்ச்சிக் குழுமத்தின் அனுமதி கோரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சி.பி. திருநாவுக்கரசு, துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்.எல்.ஏ., இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் நிா்வாகிகள், திரளாகக் கலந்து கொண்டனா்.
கலைஞா் அறிவாலயத்தில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய தரை தளம், முதல் மாடியில் கலைஞா் அரங்கம், இரண்டாவது மாடியில் கூட்ட அரங்கம், அலுவலகம், கலைஞா் நூலகம், கட்சியின் தலைவா், நிா்வாகிகள் அறை மற்றும் லிப்ட் வசதியுடன் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.