திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற அன்னவாசல் அரசு மகளிா் உயா் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவிகள் சாருமதி, ஹாஜிரா இா்பானா ஆகியோா் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சிராஜூனிசா தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சாலை மதுரம் முன்னிலை வகித்தாா்.விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தாா்.
விழாவில் உதவி தலைமை ஆசிரியா் விா்ஜின் டயானா உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். தேசிய திறனாய்வு தோ்வில் பெற்றி பெற்றதை அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் வீதம், வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 48 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.