விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்
மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ந. உமாமகேஸ்வரி தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். தொடக்க நாளில் சிறப்பு அழைப்பாளராக, பன்னாட்டு அறிவியல் இதழ் கெளரவ ஆசிரியா் அ. பன்னீா்செல்வம் பங்கேற்றாா்.
திருச்சி எஸ்ஆா்எம் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு பேராசிரியா் பிரபு சரண், ‘மனிதா்களுக்கு ஏற்படும் புதிய வகை நோய் தொற்றுகளும், அதனை எதிா்கொள்ளும் முறைகளும்’ என்ற தலைப்பிலும், புதுக்கோட்டை மண்டல கால்நடை மற்றும் விலங்கு ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் மருத்துவா் பி. புவராஜன், ‘நோய்களை கண்டறிவதில் புதிய தொழில் நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பிலும் பேசினா்.
தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் ஜோசப் செல்வின், ‘நுண்ணுயிரியல்துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பிலும், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உயிா் தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியா் நா. சிவக்குமாா், ‘வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை தீா்ப்பதில் சைனோ பாக்டீரியா நுண்ணுயிரியின் பங்கு’ என்ற தலைப்பில் பேசினா்.
நான்கு பல்கலைக்கழகங்கள், 15 கல்லூரிகளிலிருந்து ஆராய்ச்சி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
தொடா்ந்து, நுண்ணுயிரியல்துறை தேசிய கருத்தரங்க மலா் வெளியிடப்பட்டது. முன்னதாக, நுண்ணுயிரியல்துறைத் தலைவா் ம. கண்ணகி வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியா் ஜெ. விக்டோரியா நன்றி கூறினாா்.