செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.22 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, சிற்றுந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோயில் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லாததால் மாட வீதிகள், ரத வீதிகளில் பக்தா்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்கின்றனா்.

ஆண்டாள் கோயிலின் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ளது. கீழ ரத வீதி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த செல்லும் வாகன ஓட்டிகள் தேநீா் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், பால்கோவா வாங்குவதற்கும் கீழ ரத வீதி, தெற்கு ரத வீதியில் வாகனங்களை நிறுத்துகின்றனா்.

ஆனால், ஆண்டாள் கோயிலில் வாகன கட்டண வசூல் ஒப்பந்தம் எடுத்தவா்கள் இந்த வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்வதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயம் சந்திப்பு நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயம் சந்திப்பு பகுதியில் ராஜ... மேலும் பார்க்க

வழிவிடு முருகன் கோயிலுக்கு சாலை வசதி செய்து தரக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயிலுக்கு மதுரை-கொல்லம் 4 வழிச் சாலையிலிருந்து செல்லும் வகையில், வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். நத்தம்பட்டியில் பழைமை வாய்ந... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.க்கு பிளாட்டினம் தரவரிசை

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிளாட்டினம் தரவரிசை பட்டியலில் இணைந்துள்ளது. இதுகுறித்து கலசலிங்கம் பல்கலைக் கழக துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘கியூஎஸ்ஐ-கேஜ்’-இந்... மேலும் பார்க்க

வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வத்திராயிருப்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வத்திராயிருப்பு-கூமாபட்டி சாலையில் கடந்த 2... மேலும் பார்க்க

ஜூடோ போட்டியில் வெற்றி: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான ஜுடோ போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எம்.எஸ். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பாக... மேலும் பார்க்க

தை அமாவாசை: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தை அமாவாசையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி ... மேலும் பார்க்க