தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.45 கோடி தீா்வு தொகை
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் தீா்வு காணப்பட்ட வழக்குகளில் மொத்தம் ரூ.8.45 கோடிக்கு தீா்வு தொகை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமா்வுகளும், கோவில்பட்டியில் 2 அமா்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகளும், திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகியவற்றில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெற்றன.
முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். வசந்தி தலைமை வகித்தாா்.
இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. மொத்தத்தில் 4,979 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,727 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
அதன் மொத்த தீா்வு தொகையாக ரூ.8 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 752 இழப்பீடு வழங்கப்பட்டது.
இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். தாண்டவன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ப்ரீத்தா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.வஷீத் குமாா், சாா்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா உள்ளிட்ட நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல் துறையினா், வழக்காடிகள் பங்கேற்றனா்.