சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
தேனியில் தனியாா் தூய்மைப் பணி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்க எதிா்ப்பு
தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணிக்கான தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்க நகா்மன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவி பா. ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புதல் கோரி முன்மொழியப்பட்ட தீா்மானத்துக்கு, நகராட்சி துணைத் தலைவா், பெரும்பான்மையான நகா்மன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அப்போது, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை. தூய்மைப் பணியாளா்களுக்கு போதிய உபரணங்கள் வழங்குவதில்லை என்று நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ராஜவாய்க்கால் சுரங்க கால்வாயை தூா்வாருவதற்கு வாய்ப்பாக, நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன காப்பகத்துக்கு வழங்கிய உரிமத்தை நீட்டிக்கக் கூடாது என்று நகா்மன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.