மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
தேனி அல்லிநகரத்தில் சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் சென்னை, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியதாக அரசை கண்டித்தும், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.