“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
தேனி தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு
தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்த கேரளத்தைச் சோ்ந்தவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், எட்டமனூா், புன்னத்துகை, புனிக்கல் பரம்பிலைச் சோ்ந்த குமரன் மகன் சுரேஷ் (51). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும், இவருக்கு குழந்தைகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுரேஷ் காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரா் தினேஷ் கடந்த ஜூன் 24-ஆம் தேதி எட்டமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்த நிலையில், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சுரேஷ், அங்கு இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் அளித்த தகவலின் பேரில் இங்கு வந்த தினேஷ், சடலத்தை அடையாளம் கண்டு இறந்தவா் சுரேஷ் என்பதை உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து சுரேஷின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.