செய்திகள் :

தேனி: தென் காளஹஸ்தியில் விமரிசையாக நடந்த மாசித் தேரோட்டம்... வடமிழுத்து வழிபட்ட பக்தர்கள்!

post image

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இந்த திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாசித்தேரோட்டத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மஞ்சள் பட்டுடுத்தி திருக்காளத்தீஸ்வரர் உடன் திருத்தேரில் எழுந்தருளிய ஞானம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நமசிவாய நாமம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ உத்தமபாளையம் பகுதியில் உள்ள 4 ரத வீதிகள் வழியாக திருத்தேராட்டம் நடத்தப்பட்டது.

தேரோட்டம்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்: `மாசிமக விழா தீர்த்தவாரி'- மகாமகக் குளத்தில் புனித நீராடிய ஆயிரகணக்கான பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா, 'தென்னகத்துக்குக் கும்பமேளா' என்று அழைப்படும். ஒவ்வோர் ஆண்டும் மாசிமாதத்தில் வரும் மக நட்சத்திர நாள், 'மாசிமகம்' வெ... மேலும் பார்க்க

மாசி மகம்: புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள் |Photo Album

மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள்மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள்மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள... மேலும் பார்க்க

`தடைகளை உடைத்து மங்கலம் அருளும்' திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் விளக்குப் பூஜை

2025 மார்ச் 21-ம் தேதி திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகு... மேலும் பார்க்க

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில்; 77 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்லட்சுமி நரசிம்மர் கோயில்லட்சுமி நரசிம்மர் கோயில்லட்சுமி நரசிம்மர் கோயி... மேலும் பார்க்க

சுந்தர்.சி - குஷ்பூ செலுத்திய நேர்த்திக்கடன்; குடும்பத்துடன் தரிசனம்; அன்னதானம் வழங்கி வழிபாடு

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முருக பத்கர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல அரசியல் பி... மேலும் பார்க்க

`கந்தன் வள்ளியை மணந்த கானகம்’ - வள்ளிமலைக்கு புதிய அறங்காவலர் குழுத் தலைவர் நியமனம்

கந்தன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்குச் சென்று முருகவேளையும் வள்ளிக்குறமகளையும் தரிசிப்பது விசேஷத்திலும் விசேஷம் என்கிறார்கள் பெரியோர்கள். ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில் 22 கி.மீ தொலைவில் ... மேலும் பார்க்க