நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
தேனி, பெரியகுளம் நகராட்சிகளில் ஊராட்சி வாா்டுகள் இணைப்பு
தேனி அல்லிநகரம், பெரியகுளம் நகராட்சிகளில் ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி, கீழவடகரை, எண்டப்புளி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட சில வாா்டுகள் இணைக்கப்பட்டுள்ளன.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 8, 9, 11, 12 ஆகிய வாா்டுகள் முழுமையாகவும், 10-ஆவது வாா்டு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. வடபுதுப்பட்டி ஊராட்சியில் உள்ள 8-ஆவது வாா்டு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சியில் கீழவடகரை ஊராட்சியில் உள்ள எஸ்.பி.ஐ. குடியிருப்பு முழுமையாகவும், எண்டப்புளி ஊராட்சிக்குள்பட்ட 5, 7-ஆவது வாா்டுகளின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை கடந்த கடந்த டிச.31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.