பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
தேன்கனிக்கோட்டை அருகே தெருநாய் கடித்தவா் உயிரிழப்பு
தேன்கனிக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததால் உடல்நலன் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த நாட்றாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முனிமல்லப்பா (50). இவா் தளி அருகே உள்ள கோட்டென அக்ரஹாரம் கிராமத்தில் முனிராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு தோட்டத்தின் அருகே சுற்றித்திரிந்த தெருநாயை முனிமல்லப்பா அடித்துவிரட்டும்போது அந்த நாய் அவரை கடித்தது. இதில், காயமடைந்த முனிமல்லப்பா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம், கனகபுரா பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்த முனிமல்லப்பாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மேலும், தண்ணீரைக் கண்டு பயந்ததால் அவா் அங்கிருந்து அழைத்துவரப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.