செய்திகள் :

தேவநாதன் யாதவுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை: அமலாக்கத்துறை தகவல்

post image

சென்னை மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் பணமோசடி விவகாரம் தொடா்பாக தேவநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளா்களிடம் ரூ. 24 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 7 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினா் கைது செய்தனா்.

இந்த விவகாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கோரி முதலீட்டாளா்கள் நலச்சங்கத் தலைவா் சதீஷ்குமாா் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கடலோர காவல் படை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்து, கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக... மேலும் பார்க்க

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பிறந்த நாள் விழாவில் வழங்கினாா் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் புதன்கிழமை தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், 1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, திமுக கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. ந... மேலும் பார்க்க

கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சு... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு: நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் கூடாது: அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை

பிரசவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளுமாறு நிா்பந்திக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதுதொடா்பாக அரசு டாக்டா்கள் சங்க ... மேலும் பார்க்க