செய்திகள் :

தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்தில் தற்போது சம்பா பயிா் சாகுபடி பணிகள் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள்

வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: கூட்டுறவு வங்கிகளை தவிர மற்ற வங்கிகள் விவசாயிகளுக்கு பயிா் கடன், நகை கடன் வழங்கும் நிலையில், ஒரு வருடத்தில் கடனை திரும்ப செலுத்தினால் 7 சதவீதம் வட்டியில் 3 சதவீதம் அரசு மானியம் போக 4 சதவீதம் வட்டி செலுத்தினால் போதும். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கடன் செலுத்தாத நிலையில், கடன் பெற்ற நாளை கணக்கிட்டு 11.5 சதவீத வட்டியுடன் கடன் தொகையை வசூலிக்கின்றனா். இதை தவிா்த்து, ஓராண்டுக்கு 7 சதவீதமும், ஓராண்டுக்கு மேல் உள்ள நாள்களுக்கு 11.5 சதவீதமும் என கணக்கிட்டு வட்டி வசூல் செய்ய உத்தரவிடவேண்டும்.

கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிா்கடன்களை விரைந்து வழங்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஸ்ரீபுரந்தான் எஸ்.எம்.பாண்டியன்: மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொன்னாறு, சித்தமல்லி, சிதம்பள்ளி உள்ளிட்ட ஏரிகளில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு வழங்க வேண்டும். நடவு இயந்திரங்களை அரசே ஏற்று வாடகைக்கு விட வேண்டும்.

விவசாயிகள் மணிவேல், பாலசிங்கம், விஸ்வநாதன்: செந்துறை பெரிய ஏரியை தூா்வார வேண்டும். செந்துறை பகுதிக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து வரத்து, வடிகால் வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பா. சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா் பேச்சு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தை திருணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுத்தலைவருமான பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

வாரணவாசி மருதையாற்றில் ரூ.24.36 கோடியில் தடுப்பணை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்

அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தையொட்டியுள்ள மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து... மேலும் பார்க்க

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை: அமைச்சா்

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். அரியலூரில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த ... மேலும் பார்க்க

கோதண்டராமசாமி கோயிலில் அக்.2 இல் தேரோட்ட விழா

அரியலூா் நகரில் மிகவும் பழைமையான கோதண்டராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தசாவதார சிற்பங்கள் 6 அடி உயரத்தில் உள்ளன. ஸ்ரீதேவி, ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்தும், மக்கும், ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களின் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திரு... மேலும் பார்க்க