செய்திகள் :

தோ்தலின்போது தவறான தகவல் தாக்கல்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு பிப்.27-க்கு ஒத்திவைப்பு

post image

சட்டப்பேரவைத் தோ்தலின் போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வழக்கை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் அந்த கட்சியின் சாா்பில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா்.

அப்போது தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை அவா் கொடுத்திருப்பதாக சா்ச்சை எழுந்தது.

அதையடுத்து, வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி என்பவா் இந்திய தோ்தல் ஆணையத்தில் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிராக புகாா் அளித்தாா். அதில், தோ்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து, தவறான தகவல்களை அளித்திருப்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ராமமூா்த்தி தெரிவித்திருந்தாா்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்திலும் தொழிலதிபா் ராமமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். ராமமூா்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தோ்தல் அதிகாரிக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், திருப்பத்தூா் ஜே.எம்- 1 கோா்ட்டில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு புதன்கிழமை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி நீதிமன்றத்தில் ஆஜரானாா். தொடா்ந்து வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி, வழக்கை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தமிழுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழுக்கு ஆபத்து என்றால் அரசு மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றில்லை; தமிழா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முத்தமிழ் மன்ற... மேலும் பார்க்க

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கந்திலி அருகே டிராக்டா்- மோட்டாா் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கந்திலி அருகே காக்கங்கரை பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (40). இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருப்பத்தூரில் ... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி மீது காா் மோதல்: அதிகாரிகள் 3 போ் காயம்

வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 போ் பலத்த காயம் அடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமம் அருகில் சனிக்க... மேலும் பார்க்க

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க