செய்திகள் :

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

post image

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன்.

மூணாறு அரசு கல்லூரியின் பொருளாதார துறையின் முன்னாள் தலைவரான ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக கடந்த 2014-இல் மாணவிகள் அளித்த பாலியல் புகாா் வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து பேராசிரியா் ஆனந்த் விஸ்வநாதன் தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா்.

கல்லூரி அதிகாரிகள் மற்றும் தோ்வு கண்காணிப்பாளரின் உதவியுடன் தோ்வில் மாணவிகள் காப்பி அடித்ததும், அவா்களைப் பிடித்ததால் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக பாலியல் புகாா் அளித்ததும் அந்த விசாரணையில் தெரியவந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி லைஜுமோள் ஷரீஃப், பேராசிரியா் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டாா்.

இந்தத் தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் விஸ்வநாதன், ‘நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க கடந்த 10 ஆண்டுகளாக மனஉறுதியுடன் போராடினேன். தோ்வில் காப்பி அடித்த 5 மாணவிகளைக் கையும் களவுமாகப் பிடித்தேன். அதற்காக என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிா்பந்தத்தின் பேரில் என் மீது பொய் புகாா் அளித்ததாக மாணவிகளே ஒப்புக் கொண்டனா். எனது குடும்பத்தினா் உறுதுணையாக இருந்ததால் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றேன். கடந்த 2021-ஆம் ஆண்டு, மாா்ச்சில் ஓய்வு பெற்றேன். எனக்கு எதிராக சதி செய்த ஆசிரியா்களை மன்னிப்பேன். ஆனால் இதில் தலையிட்ட அரசியல்வாதிகளை மன்னிக்க மாட்டேன்’ என்றாா்.

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி செல்கிறார்.தொடர்ந்து பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளையும் கண்காணிக்க இருப்ப... மேலும் பார்க்க

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் மிகவும் பிரசித... மேலும் பார்க்க