அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!
தைவானைத் தாக்கிய`ரகசா' புயல்: ஏரி, பாலம் உடைந்து 14 பேர் பலி; 124 பேர் மாயம்
தைவானில் கடந்த (செப். 22) திங்கட்கிழமை முதல் 'ரகசா' புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கி இருக்கிறது. அங்கு 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கிறது.
வீடுகள், குடியிருப்புகள் என கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தைவானைத் தாக்கிய அந்த அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 124 பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
'ரகசா' புயலின் எதிரொலியாக, நிலச்சரிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 'ரகசா' புயல் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கிச் செல்கிறது.
ஹாங்காங்கையும் தாக்கும் எனக் கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டு 'மொராகோட்' புயல் தாக்கியதில் தெற்கு தைவான் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 700 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.