BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் எதிர்நீச்சல் - 2 தொடர்!
எதிர்நீச்சல் - 2 தொடரின் முதல் வார டிஆர்பி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் திருச்செல்வம். எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார்.
இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
இதையும் படிக்க: குளிர்பானத்தை தடை செய்ய மாட்டீர்கள்.. நான் விளம்பரத்தில் நடிக்கக் கூடாதா? வைரலாகும் ஷாருக் கான் பேச்சு
இந்த நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடர் முதல்வாரத்திலேயே 8.01 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியுள்ளது. இது இத்தொடருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த வாரங்களில் இத்தொடரின் டிஆர்பி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன. மூன்று முடிச்சு தொடர் 9.48 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் 9.47 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிங்கப் பெண்ணே தொடர் இரண்டாம் இடத்தையும் கயல் தொடர் 9.46 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.