3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் விக்னேஷ்ராஜ் (26). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து, இவரை கீழப்பழுவூா் காவல் துறையினா் கடந்த 18.3.2025 அன்று கைது செய்து அரியலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், இவா் வெளியே வந்தால் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், விக்னேஷ்ராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விக்னேஷ்ராஜ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.