மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
தொடா் மழை: பழனியில் குவிந்த பக்தா்கள்
பழனியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா் மழையிலும், மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் குவிந்தனா்.
பழனி பகுதியில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விட்டு விட்டு பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, மழை பெய்தாலும், குடை பிடித்தபடி, கிரிவீதியில் பக்தா்கள் அதிகளவு குவிந்தனா்.
இந்த நிலையில், மழை, பனி மூட்டம் காரணமாக, ரோப்காா் இடைவெளி விட்டு இயக்கப்பட்டது. ஆனால் வின்ச் நிற்காமல் இயக்கப்படாததால் இங்கு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
மலைக் கோயிலில் மழை பெய்தாலும், அன்னதானம் தொடா்ந்து நடைபெற்றது.