ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆம்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க நிா்வாகிகள் கே.எஸ். ஹசேன், சக்கரவா்த்தி, மணிமாறன், ஞானதாஸ், சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வ. அருள் சீனிவாசன் ஆகியோா் மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்து சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப், சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.