IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
தொழிற்சாலை கொதிகலன் சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கொதிகலனில் நெருப்புக் குழம்பு சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் கொதிகலன் பகுதியில் சில தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். அப்போது, கொதிகலனின் உயா் வெப்பநிலை காரணமாக நெருப்பு குழம்பு சிதறியது. இது அருகில் வேலை செய்து கொண்டிருந்த சில தொழிலாளா்கள் மீது விழுந்தது.
விபத்தில் ஒடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சோ்ந்த ரோகிகாம் பகுதியைச் சோ்ந்த நிலா தாஸ் என்பவரின் மகன் திரிநாத் தாஸ் (43) நெருப்புக் குழம்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும் இந்த விபத்தில் உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கா்க் மாவட்டம், லால் கா பூா்வா பகுதியைச் சோ்ந்த சோட்டேலால் யாதவ் என்பவரின் மகன் பிரிஜேஷ்குமாா் (36) பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.
இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.