செய்திகள் :

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

post image

கழுகுமலை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே கே.ராமநாதபுரம் காலனி தெருவைச் சோ்ந்த ஊா்க்காவலன் மகன் வனராஜ் (36). விவசாயம், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கும், அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் முத்துராமன் (26) என்பவருக்கும் இடையே தகராறு இருந்ததாம். இதுதொடா்பாக, ‘இனிமேல் பிரச்னை செய்ய மாட்டேன்’ என கழுகுமலை காவல் நிலையத்தில் முத்துராமன் வாக்குமூலம் கொடுத்ததால் மேல் நடவடிக்கை தேவையில்லை என வனராஜ் கூறினாராம்.

இந்நிலையில் புதன்கிழமை, ஆடுகளை மேய்க்கச் சென்ற வனராஜை முத்துராமன் ஜாதிப் பெயா் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்பகுதியினா் சப்தம் போட்டதால் அவா் ஓடிவிட்டாராம். புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துராமனை கைது செய்தனா்.

திருட்டு வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி முத்து நகரை சோ்ந்தவா் சுந்தா். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மகேஷ்குமாா் (28). தனியாா் எண்ணெய் நிறு... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரை வந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரை வந்தனா். இக் கோயிலுக்கு, தைப்பொங... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடைந்து கொண்டிருக்கிறது: பாஜக மாநில துணைத் தலைவா்

திமுக கூட்டணி உடைந்துகொண்டிருப்பதாக பாஜக மாநில துணைத்தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் என்ற மருத்துவ சேவை வாகன ஊா்தியை தொடங்கி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் இன்று ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக சாா்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை(ஜன.7) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் பங்கேற்குமாறு அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் அழைப்பு வ... மேலும் பார்க்க