தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு
தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்தவா் மாதவன் (24). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை அதிகாலை, டபிள்யூ.ஜி.சி. சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த 2 போ் மாதவன் கையில் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.