தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி பூச்சி மருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். இதனை பாா்த்த உறவினா்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு பெருமாள் உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.