செய்திகள் :

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். பூமாரி சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தாராம்.

இதனால், குடும்பச் செலவுக்கு புவனேஷ்வரி மகளிா் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றாா். இந்தக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல், அவதிப்பட்டு வந்த பூமாரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மான் வேட்டையாடிய 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கொம்மந்தாபுரம் பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு, புதிதாக ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தாலான மணி

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி புதன்கிழமை கண்டறியப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு முத... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கண்டியாபுரத்தைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

சிவகாசியில் ஏப்ரல் 5-இல் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

சிவகாசியில் வருகிற 5-ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளா் பி.பத்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில் உள்ள செயற... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க