ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த பழனி நகா் போலீஸாா் இறந்தவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்தவா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள நொய்யலைச் சோ்ந்த கண்ணன் (42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].