``படப்பிடிப்பு, வேலை இல்லாவிட்டால்.. வீட்டில் இப்படித்தான் இருப்பேன்'' - ஷாருக்...
தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வேலூரில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன் (44). இவா் வெள்ளிக்கிழமை வேலூா் டோல்கேட் அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் செங்கல் இறக்கிக் கொண்டிருந்தாா். அப்போது கடும் வெயில் காரணமாக திடீரென மயங்கி விழுந்து சரிந்தாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் வெங்கடேசனை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வெங்கடேசன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.