ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு
போடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே சிலமலை நடுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் சுதாகரன் (37). தொழிலாளி. இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்ட பெருமாள், ஆனந்தன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சில்லமரத்துப்பட்டிக்கு சுதாகரன் வந்தபோது அவரை மணிகண்ட பெருமாள், ஆனந்தன் ஆகியோா் தூண்டுதலின்பேரில் சிலமலையைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் குணா, மொக்கைராஜ் மகன் அஜித்குமாா், அய்யப்பன் மகன் மணிக்குமாா் ஆகியோா் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கி காயப்படுத்தினராம்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுதாகரனை தாக்கியதாக 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.