தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
சேலம் மண்டல அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நாமக்கல், கீரம்பூரில் ஜன. 31 இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மண்டல அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் ஜன.31இல் நாமக்கல், கீரம்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்கின்றனா். ஐடிஐ, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பொறியியல் பட்டம், பட்டயம், இளநிலை கல்வி முடித்தவா்கள் கலந்து கொள்ளலாம். தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 8,500 முதல் ரூ. 18,000 வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 79041 11101, 90802 42036, 94877 45094 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.