டிஎன்பிஎல் சாம்பியன் யார்? திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!
தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி
சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன.
சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் முள்வேலி அமைத்து, ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா், ஆடுகளுக்கு இரவில் இரை வைத்துவிட்டுச் சென்று, அடுத்த நாள் காலையில் தோட்டத்துக்கு வருவாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை பனையேறும் தொழிலாளி ஒருவா் தோட்டத்துக்குச் சென்றபோது, நாய்கள் குரைத்தபடி வெளியே ஓடினவாம். அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, 25 ஆடுகள் இறந்துகிடந்தது தெரியவந்ததாம்.
தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா், விஏஓ ஜாஸ்மின்மேரி, கால்நடை மருத்துவா் சவுந்தா், வனத்துறை அலுவலா் சக்திவேல் சென்று விசாரணை மேற்கொண்டனா். 25 ஆடுகள் இறந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் சாமுவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.