ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்ட...
வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள எம்.கே. தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாரூக். அரிசி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை மாடி அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த அறையில் இருந்த பாருக் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியேறி வந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா், தீயை அணைத்தனா். இதில் அந்த அறையில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.