செய்திகள் :

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

post image

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 52* ரன்களும் விளாசினர். 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கேப்டன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், ஐபிஎல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனியைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் 2-வது இடம்பிடித்துள்ளார்.

கடந்தாண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியுடன் சேர்த்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

இதையும் படிக்க: எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள்

  • 10 -கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2014-2015

  • 8 - ஷேன் வார்னே (ராஜஸ்தான்) - 2008

  • 8 - ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா, பஞ்சாப்) - 2024-25

  • 7 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2013

  • 6 - கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2012

  • 6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2014

  • 6 - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்) - 2018

  • 6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2019

  • 6 - ஃபாப் டூபிளெசிஸ் (பெங்களூரு) - 2024

இதையும் படிக்க: மிட்செல் ஹே அதிரடி 99*: ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!

சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அந்த அணி வீரர் சந்தீப் சர்மா பாராட்டியுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ... மேலும் பார்க்க

சிங்கம் வந்துவிட்டது: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா!

காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி 4... மேலும் பார்க்க

எச்சரிக்கை மணியான முதல் தோல்வி..! பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டி!

முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் முதல் தோல்வி விரைவிலேயே வந்தது எச்சரிக்கை மணியாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார். கடந்தாண்டு சாம்பியன் வென்ற கேகேஆர் ... மேலும் பார்க்க

டார்-ஆர்டர் பேட்டர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்: ஃபிளெமிங்

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் டார்-ஆர்டர் வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பையுடன் வென்றது. பின்னர், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவி... மேலும் பார்க்க

தோனி ஓய்வு எப்போது? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது எப்போது என ஃபிளெமிங் பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!

சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ... மேலும் பார்க்க