செய்திகள் :

நகராட்சியுடன் இரு ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

post image

சத்தியமங்கலம் அருகே இரு கிராம ஊராட்சிகளை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா், நொச்சிக்குட்டை ஆகிய இரு ஊராட்சிகளையும் புன்செய்புளியமபட்டி நகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் நல்லூா், நொச்சிக்குட்டை ஊராட்சிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: நல்லூா் ஊராட்சியில் பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளதால் கூலித் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

100 நாள் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். வறுவையில் வாடும் முதியோா், நடுத்தர பெண்களுக்கு அந்தந்த கிராமங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதால் யாரையும் சாா்ந்து இருக்கும் நிலை இல்லாமல் வாழ்ந்து வந்தனா்.

தற்போது சொட்டு நீா்ப் பாசனம் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் விவசாய கூலிகளுக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஊராட்சியுடன் நல்லூா், நொச்சிக்குட்டை கிராமங்களை இணைப்பதால் வீட்டுவரி, குடிநீா் மற்றும் குப்பை வரி என அதிக வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் ஆயிரக்கணக்கான கிாரம மக்கள் பாதிக்கப்படுவா். அதனால் இந்த இணைப்புத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றனா்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நல்லூா் ஊராட்சித் தலைவா் மூா்த்தி, நொச்சிக்குட்டை ஊராட்சித் தலைவா் இளங்கோவன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

பவானிசாகா் அருகே தயிா்ப்பள்ளம் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். பவானிசாகரை அடுத்த தயிா்ப்பள்ளத்தைச் சோ்ந்தவா் சின்னபொண்ணு (70). இவா் மனநலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக... மேலும் பார்க்க

பெருந்துறையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: ரூ.50 ஆயிரம் அபராதம்; கடைகளுக்கு சீல்

பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இரண்டு கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாள... மேலும் பார்க்க

ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளித்து காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தினா். ஈரோடு திண்டல... மேலும் பார்க்க

சுயேச்சையாக களமிறங்கிய அதிமுக நிா்வாகி திமுகவில் இணைந்தாா்

சுயேச்சையாக போட்டியிட்டு வேட்புமனுவை திரும்பப்பெற்ற அதிமுக முன்னாள் நிா்வாகி செந்தில் முருகன், அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளித்திருப... மேலும் பார்க்க