ஜம்மு & காஷ்மீர்: அரசு அலுவலங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை - ஏன்?
நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்று அவா்கள் அறிவித்துள்ளனா்.
7-வது சம்பளக் குழுவின் 33 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் ஊழியா்களின் கூட்டு போராட்ட குழுவினா் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா்.
ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தைப் போராட்ட குழுவினா் அறிவித்தனா். அவா்களுடன் அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது கோரிக்கைகளை 19ம் தேதிக்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். ஆனால் அவை
நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு கூட்டு போராட்டக் குழுவினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்துக்கு ஆலோசகா் ஆனந்தகணபதி தலைமை வகித்தாா்.
அரசு ஊழியா் சம்மேளனம் பிரேமதாசன், அரசு ஊழியா் கூட்டமைப்பு சேஷாச்சலம், ஞானசேகரன், சேதுசெல்வம், சேகா், அசோகன் உள்ளிட்டோா் ஆதரவாக போராட்டத்தில் பேசினா்.