செய்திகள் :

நக்கலமுத்தன்பட்டியில் தொழிலாளி தற்கொலை

post image

கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நக்கலமுத்தன்பட்டி அருந்ததியா் காலனியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஜெயராஜ் (54). இவா் தனது மனைவி ஜெயராணியுடன் விவசாயம், கோழிப் பண்ணைத் தொழில் செய்து வந்ததாகவும், கோழிப் பண்ணைத் தொழிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தோட்டத்துக்குச் சென்ற அவா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரை உறவினா்கள் தேடினா். அப்போது, அவா் கூட்டுறவு சங்கத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவரது மகன் ஜான்சன்டேவிட் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! -அமைச்சா் பெ.கீதாஜீவன்

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சா் பெ.கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி மகளிா் பூங்காவில் மாநகராட்சி, ரோட்டரி கிளப், நெல்ல... மேலும் பார்க்க

சூரன்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சூரன்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூரன்குடி அருகே உள்ள சிலுவைபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியின் மகள் அனிதா (19). கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். ... மேலும் பார்க்க

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவா்-மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் முதல்வா்

திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்ப... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்ய... மேலும் பார்க்க