விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும...
சூரன்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை
சூரன்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சூரன்குடி அருகே உள்ள சிலுவைபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியின் மகள் அனிதா (19). கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவருக்கும் இவரது தாய் பிச்சம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த அனிதா, 2 நாள்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் தனி அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சூரன்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி சென்று அனிதாவின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா். சூரன்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.